Showing posts with label ~~ Chinmayee. Show all posts
Showing posts with label ~~ Chinmayee. Show all posts

idhayathai yedho ondru lyrics-ennai arinthaal tamil song lyrics /இதயத்தை ஏதோ ஒன்று

Movie Name:Ennai arinthaal
Song Name:Idhayathai yedho ondru
Singer:Chinmayi
Music Director:Harris Jeyaraj
Lyricist:Thamarai
Year of release:2014

Lyrics:-

Idhayathai yedho ondru
Izhukkuthu konjam indru
Idhu varai idhu pola naanum illaiye

Kadal alai pole vanthu
Karaigalai allum ondru
Muzhugida manadhum pin vaangavillaiye

Iruppaathu oru manathu
Idhu varai adhu enathu
Ennai vittu medhuvaai 
Adhu poga kandene

Idhu oru kanavu nilai
Kalaithida virumbavillai
Kanavukkul kanavaai 
Ennai naane kandene

Enakkenna vendum endru
Oru vaarthai kelu nindru
Ini neeyum naanum ondru
Ena sollum naalum endru
Enakkenna vendum endru
Oru vaarthai kelu nindru
Ini neeyum naanum ondru
Ena sollum naalum endru

Malargalai alli vanthu
Magizhvudan kaiyil thanthu
Nadhiyinil ilai ena naan 
Thoynthu selgindren

Arumbugal poovaagum azhagiya maatram
Aayiram aandaga pazhagiya thotram

Oru velli kolusu pola
Indha manasu sinungum keezha
Aniyaatha vairam pola
Pudhu naanam minungum mela

Idhayathai yedho ondru ...

இதயத்தை ஏதோ ஒன்று
இழுக்குது கொஞ்சம் நின்று
இதுவரை இது போலே நானும் இல்லையே 

கடலலை போலே வந்து 
கரைகளை அள்ளும் ஒன்று 
முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே

இருப்பது ஒரு மனது இதுவரை அது எனது
என்னை விட்டு மெதுவாய் அது போக கண்டேனே

இது ஒரு கனவு நிலை 
கலைத்திட விரும்பவில்லை 

எனக்கென்ன வேண்டும் என்று
ஒரு வார்த்தை கேளு நின்று
இனி நீயும் நானும் ஒன்று
என சொல்லும் நாளும் இன்று

மலர்களை அள்ளி வந்து
மகிழ்வுடன் கையில் தந்து
நதியினில் இலை என நான் 
தோய்ந்து செல்கின்றேன்

அரும்புகள் பூவாகும் அழகிய மாற்றம்
ஆயிரம் ஆண்டாக பழகிய தோற்றம்

ஒரு வெள்ளி கொலுசு போல 
இந்த மனசு சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல 
புது நாணம் மினுங்கும் மேல (2)

இதயத்தை ஏதோ ஒன்று ....

nenje nenje lyrics-yaan tamil song lyrics

Movie Name:Yaan
Song Name:Nenje nenje
Singers:Chinmayi,Unni krishnan
Music Director:Harris jeyaraj
Lyricist:Kabilan

Lyrics:-

Nenje nenje kaadhal nenje
Ennai nee thaan ennadi senje
Bhoomi inge megam ange
Rendai serkkum mazhai thuli enge
Dhooram nindru nee ennaik kollaathe
Verum poovum ner endru sollaathe
Kaadhal aruge illai adhanaaal thollai
Ariveno maname

Unnai marantha ponen
Iranthaa ponen varuven oar dhiname
Nenje nenje kaadhal nenje
Ennai nee thaan ennadi senje

Poovaith thottu vandhaalum
Kaiyil vaasam vittu pogaathe
Undhan manam thaan marappeno
Adhai maranthaal irappeno

Kannai moodi thoonga vendum
Aadu penne azhagiya laali
Kaadhal kangal thoongum podhu
Poove undhan pudavai tholil

Ennai vittip naan ponen thannaale
Kanneerukkul meen aanen unnaale
Pesa vazhiye illai mozhiye illai
Thaviyaai naan thavithen
Kaadhal kanavil unnai muzhuthaai kaana
Piraiyaai naan ilaithen

Nenje nenje ...

நெஞ்சே நெஞ்சே காதல் நெஞ்சே
என்னை நீ தான் என்னடி செஞ்சே
பூமி இங்கே மேகம் அங்கே
ரெண்டை சேர்க்கும் மழை துளி எங்கே
தூரம் நின்று நீ என்னைக் கொல்லாதே
வெறும் பூவும் வெர் என்று சொல்லாதே
காதல் அருகே இல்லை அதனால் தொல்லை
அறிவேனோ மனமே
உன்னை மறந்தா போனேன்
இறந்தா போனேன் வருவேன் ஓர் தினமே

நெஞ்சே நெஞ்சே காதல் நெஞ்சே
என்னை நீ தான் என்னடி செஞ்சே

பூவைத் தொட்டு வந்தாலும்
கையில் வாசம் விட்டுப் போகாதே
உந்தன் மனம் தான் மறப்பேனோ
அதை மறந்தால் இறப்பேனோ

கண்ணை மூடி தூங்க வேண்டும்
ஆடு பெண்ணே அழகிய லாலி
காதல் கண்கள் தூங்கும் போது
பூவே உந்தன் புடவை தோளில்

என்னை விட்டு நான் போனேன் தன்னாலே
கண்ணீருக்குள் மீன் ஆனேன் உன்னாலே
பேச வழியே இல்லை மொழியே இல்லை
தவியாய் நான் தவித்தேன்
காதல் கனவில் உன்னை முழுதாய் காண
பிறையாய் நான் இளைத்தேன்

நெஞ்சே நெஞ்சே காதல் நெஞ்சே
என்னை நீ தான் என்னடி செஞ்சே
பூமி இங்கே மேகம் அங்கே
ரெண்டை சேர்க்கும் மழை துளி எங்கே



kanaave kanaave lyrics-ambikapathy tamil song lyrics / கனாவே கனாவே

Movie Name:Ambikapathy
Song Name:Kanave kanave
Singers:Madhushree,Vaishali,Chinmayi,Pooja
Music Director:A.R.Rahman
Lyricist:Vairamuthu
Cast:Dhanush,Sonam kapoor

Lyrics:-

Kanaave kanave un kannil irukku
Vinaavum vinaavum un nenjil irukku
Kanaave kanaave un kannil irukku
Vinaavum vinaavum un nenjil irukku

Veettukkul maangal padi eduthoda
Pachai kili koottam paattukkal paada
Thirumana veedu thikku mukkaada

Kuyile nadathu oru kutti kalaatta
Suvai illai oru sandai illatta
Hey thulli varum aaru endrum thenguvathu illai
Paattigalellaam thaavani poda
Thaathaakkal ellaam jeanudan aada
Vaandugal ellaam kai kotti paada

Oorum uravum ingu ondru pattaale
Veedu vaasal adhu rendu padaatho
Thenin mugathil oru ee ottaathe
Engal agathin thuyar nillaathe
Kaatruku kavalai oh pada theriyaathe
Marudhani poosi mahaaraani aavom
Varnangal korthu vaanavil seivom

Oh vaazhai maram selai kattaadho kattaadho
Vaasalellaam vinmeen kottaatho kottaatho
Naadi narambil inbam sottaatho sottaatho
Aagaayam kaiyil ettaatho ettaatho
Dheivam vanthu kadhavaith thattaatho thattaatho
Dhevathaigal pallaandu paadaatho paadaatho
Thirumaname sorgam endru aagaatho aagaatho

Mana makkal vaazhga mangalam vaazhga (2)

ச த நிரி ஆ… ச த ஆ…
கமதநித நிரிச நிபக ரிகமகப ரிகபச
கம தத நிநி சநிதப ரிகமதப ரிச ஆ… ஆ…
கம தத நிநி நிகரிகசரிச ஆ… ஆ… ஆ…

கனாவே கனாவே உன் கண்ணில் இருக்கு
வினாவும் வினாவும் உன் நெஞ்சில் இருக்கு
கனவே கனவே உன் கண்ணில் இருக்கு
வினாவும் வினாவும் உன் நெஞ்சில் இருக்கு

விட்டுக்குள் மான்கள் படியெடுத்தோட
பச்சை கிளி கூட்டம் பாட்டுக்கள் பாட
திருமண வீடு திக்கு முக்கு ஆட

குயிலே நடத்து ஒரு குட்டி கலாட்டா
சுவை இல்லை ஒரு சண்டை இல்லாட்டா
துள்ளி வரும் ஆறு என்றும் தேங்குவது இல்லை
பாட்டிகள் எல்லாம் தாவணி போட
தாத்தாக்கள் எல்லாம் ஜீன்ஸ் உடன் ஆட
வாண்டுகள் எல்லாம் கை கொட்டி பாட

ஊரும் உறவும் இங்கு ஒன்று பட்டாலே
வீடு வாசல் அது ரெண்டு படாதோ
தேனின் முகத்தில் ஒரு ஈ ஓட்டாதே
எங்கள் அகத்தின் துயர் நில்லாதே
காற்றுக்கு கவலை ஓ… பட தெரியாதே
மருதானி பூசி மஹாராணி ஆவோம்
வர்ணங்கள் கோர்த்து வானவில் செய்வோம்

ஓ வாழை மரம் சேலை கட்டாதோ கட்டாதோ
வாசலெல்லாம் விண்மீன் கொட்டாதோ கொட்டாதோ
நாடி நரம்பில் இன்பம் சொட்டாதோ சொட்டாதோ
ஆகாயம் கையில் எட்டாதோ எட்டாதோ
தெய்வம் வந்து கதவை தட்டாதோ தட்டாதோ
தேவதைகள் பல்லாண்டு பாடாதோ பாடாதோ
திருமணமே சொர்கம் என்று ஆகாதோ ஆகாதோ

மன மக்கள் வாழ்க மங்களம் வாழ்க…(2)


https://www.youtube.com/watch?v=E_1x7ATZ7Q4

latcham calorie lyrics-yaan tamil song lyrics / லட்சம் கலோரி

Movie Name:Yaan
Song Name:Latcham calorie
Singers:Arjun menon.Chinmayi
Music Director:Harris jeyaraj
Lyricist:Pa.Vijay
Year of release:2014

Lyrics:-

Oh latcham calorie otrai muthathil
Idhazh ottum sathathil cellil paravuthe
Kodi vinaadigal endhan nenjathil
Unnaik konjum ganathil naadi thudikkuthe

Oh oraayiram anukkal
Nooraayiram thisukkal
Ondraagave silirkkum
Nee paarvai ondrai veesinaale

Neurongalum sinungum
Protongalum mayangum
En penmaiyum kirangum
Nee otrai vaarthai pesinaale

Latcham calorie ...

Unnaal enakkul pudhithaaga mutha phobia
Poovai vizhikkul nee kaadhal thoovi poviya
Unnaal enakkul pudhithaaga mutha phobia
Poovai vizhikkul nee kaadhal thoovi poviya
Olive pookkalaal aadai aninthu
Holland veedhiyil selvom nadanthu

Pani pani adhu pozhiya
Iruvathu virai inaiya
Ini ini idhazh nanaiya
Uyir mella mella malara

Latcham calorie ....

Lesaai anaithaai ul moochum veppam kondathe
Un mel inaithaai uyir motham jillai maaruthe

Un pol penmaiyai utru asaithaal
Then pol nenjamum thithithirukkum
Kiwi kani ival thaana
Thavvi kolla idham thaana
Thulli sendru viduvena
Nitham unnai adainthena

ஓ லட்சம் கலோரி ஒற்றை முத்ததில்
இதழ் ஒட்டும் சத்தத்தில் செல்லில் பரவுதே
கோடி வினாடிகள் எந்தன் நெஞ்சத்தில்
உன்னைக் கொஞ்சும் கணத்தில்
நாடி துடிக்குதே

ஓ ஓராயிரம் அணுக்கள்
நூறாயிரம் திசுக்கள்
ஒன்றாகவே சிலிர்க்கும்
நீ பார்வை ஒன்றை வீசினாலே
நீயூராங்களும் சினுங்கும்
புரோட்டான்களும் மயங்கும்
என் பெண்மையும் கிரங்கும்
நீ ஒத்த வார்த்தை பேசினாலே

லட்சம் கலோரி ....

உன்னால் எனக்குள் புதிதாக முத்த போபியா
பூவாய் விழிக்குள் நீ காதல் தூவிப் போவியா
உன்னால் எனக்குள் புதிதாக முத்த போபியா
தூவாய் விழிக்குள் நீ காதல் தூவிப் போவியா

ஆலிவ் பூக்களால் ஆடை அணிந்து
ஹோலாந்த் வீதியில் செல்வோம் நடந்து

பனி பனியது பொழிய
இருவது விரல் இணைய
இனி இனி இதழ் நனைய
உயிர் மெல்ல மெல்ல மலர

லட்சம் கலோரி ....

லேசாய் அணைத்தாய்
உள் மூச்சும் வெப்பம் கொண்டதே
உன்மேல் இணைத்தாய்
உயிர் மொத்தம் ஜில்லாய் மாறுதே

உன் போல் பெண்மையை
உற்று அசைத்தால்
தேன் போல் நெஞ்சமும் தித்தித்திருக்கும்
கிவி கனி இவள் தானா
தவ்விக் கொள்ள இடம் தானா
துள்ளிச் சென்று விடுவேனா
நித்தம் உன்னை அடைந்தேனா

லட்சம் கலோரி ....

http://www.youtube.com/watch?v=LI8fd1ZSvdo



nenje lyrics-panivizhum nilavu tamil song lyrics /

Movie Name:Panivizhum nilavu
Song Name:Nenje
Singers:Chinmayi,Naresh iyer
Music Director:L.V.Ganesan
Lyricist:Na.Muthukumar
Year of release:2014

 

Lyrics:-

Nenje oh
Nenje oh

Kangal rendum kaadhal solla
Anbe neeyo thallich sella
Kannaik katti kaattilvittaal
Anbe naanum enge sella

Oru murai ennai nee paarthidu
Vizhigale pesum mozhi kettidu
Manadhinaal mella mazhaith thoovidu
Azhaikkirathe

Sila murai kangal poi sollume
Soozhnilai poiyai mei aakkume
Pogaiyena thondrum pani moottame
Vilagume

Nenje oh

Verenna anbe verenna
Unnai naanum ketkiren
Vaazhnthaalum mannil vizhunthaalum
Undhan anbaik ketpen
Idaiveligal kurainthiduma
Ini intha dhooram thaangaathe
Mana thiraigal vilagiduma
Edharkindha mounam podhum
Pogaadhe pogaathe en nenjam pavam
Kanneeril thallaadum en kaadhal odam

Nenje oh

Kangal rendum...

Paakkaathe ennaip paakkaathe
Paarthaal kobam koodum
Pesaathe yedhum pesaathe
Undaal kooda podhum
Nadanthathellaam maranthidalaam
Manadhinil kaayam aaraathe
Idhayathile keeri vittaai
Valikkuthu penne unnaale
Yen unnaip paartheno ennulle kaayam
Un kaadhal mullaaga en nenjil vaazhum

Nenje oh

நெஞ்சே ..ஓ..
நெஞ்சே .. ஓ..

கண்கள் ரெண்டும் காதல் சொல்ல
அன்பே நீயோ தள்ளிச் செல்ல
கண்ணைக்கட்டி காட்டில் விட்டால்
அன்பே நானும் எங்கே செல்ல

ஒரு முறை என்னை நீ பார்த்திடு
விழிகளே பேசும் மொழி கேட்டிடு
மனதினால் மெல்ல மழைத் தூவிடு
அழைக்கிறதே

சில முறை கண்கள் பொய் சொல்லுமே
சூழ்நிலை பொய்யை மெய் ஆக்குமே
புகையென தோன்றும் பனி மூட்டமே
விலகுமே

நெஞ்சே.. ஓ..

வேறென்ன அன்பே வேறென்ன
உன்னை நான் கேட்கிறேன்
வாழ்ந்தாலும் மண்ணில் விழுந்தாலும்
உந்தன் அன்பைக் கேட்பேன்
இடைவெளிகள் குறைந்திடுமா
இனி இந்த தூரம் தாங்காதே
மன திரைகள் விலகிடுமா
எதற்கிந்த மௌனம் போதும்
போகாதே போகாதே என் நெஞ்சம் பாவம்
கண்ணீரில் தள்ளாடும் என் காதல் ஓடம்

நெஞ்சே .. ஓ ..

கண்கள் ரெண்டும் ...

பார்க்காதே என்னைப் பார்க்காதே
பார்த்தல் கோபம் கூடும்
பேசாதே ஏதும் பேசாதே
உண்டால் கூட போதும்
நடந்ததெல்லாம் மறந்திடலாம்
மனதினில் காயம் ஆறாதே
இதயத்திலே கீறி விட்டாய்
வலிக்குது பெண்ணே உன்னாலே
ஏன் உன்னைப் பார்த்தேனோ என்னுள்ளே காயம்
உன் காதல் முள்ளாக என் நெஞ்சில் வாழும்

நெஞ்சே ..ஓ ..


senthee vizhuntha lyrics-kochadaiiyaan tamil song lyrics / செந்தீ விழுந்த

Movie Name:Kochadaiiyaan
Song Name:Senthee vizhuntha
Singers:Srinias,Chinmayi
Music Director:A.R.Rahman
Lyricist:Vairamuthu
Cast:Rajinikanth,Deepika,Nasser
Year of release:2014



Lyrics:-

Senthee vizhuntha sempor paaraiyil
Manthi uruttum mayilin muttaiyaai
Idhayam

Nalla marathin narungilai yizhinthu
Velach suzhiyil vizhuntha malaraai
Idhayam
Nazhuvi nazhuvi nagarnthu nagarnthu poguthe

Yeno sol yeno
Yeno sol sol yeno solvaaya
Yeno sol sol yeno solvaaya

Idhayam
Karaigal maranthu thisaigal tholainthu poguthe

Yeno sol yeno
Yeno sol sol yeno
Yeno sol sol yeno solvaaya

Pooppathu maranthana kodigal
Punnagai maranthathu minnal
Kaaippathu maranthathu kaadu
Kaaviyam maranthathu yedu (2)

Yaano ninnai marakkilen
Ninnai marakkilen
Ninnai marakkilen

Idhayam nazhuvi nazhuvi
Nagarnthu nagarnthu poguthe

Yeno sol yeno
Yeno sol sol yeno
Yeno sol sol yeno solvaaya

Senthamizh piriyum sangam
Sengadal piriyum alaigal
Oliyaip piriyum kaatru
Uliyaip piriyum sirpam (2)

Yaano ninnaip pirigilen
Pirigilen pirigilen

Sirukottu perum paayum thoongiyaangu
En uyiro sirithu
Kaadhalo perithu

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில்
மந்தி உருட்டும் மயிலின் முட்டையாய்
இதயம்

நல்ல மரத்தின் நறுங்கிளை யிழிந்து
வெள்ளச் சுழியில் விழுந்த மலராய்
இதயம்
நழுவி நழுவி நகர்ந்து நகர்ந்து நகர்ந்து
போகுதே

ஏனோ சொல் ஏனோ
ஏனோ சொல் சொல் ஏனோ சொல்வாய
ஏனோ சொல் சொல் ஏனோ சொல்வாயா
இதயம்
கரைகள் மறந்து திசைகள் தொலைந்து
போகுதே

ஏனோ சொல் ஏனோ
ஏனோ சொல் சொல் ஏனோ
ஏனோ சொல் சொல் ஏனோ சொல்வாயா

பூப்பது மறந்தன கொடிகள்
புன்னகை மறந்தது மின்னல்
காய்ப்பது மறந்தது காடு
காவியம் மறந்தது ஏடு (2)

யானோ நின்னை மறக்கிலேன்
நின்னை மறக்கிலேன்
நின்னை மறக்கிலேன்

இதயம் நழுவி நழுவி
நகர்ந்து நகர்ந்து நகர்ந்து போகுதே

ஏனோ சொல் ஏனோ
ஏனோ சொல் சொல் ஏனோ சொல்வாயா
ஏனோ சொல் சொல் ஏனோ சொல்வாயா

செந்தமிழ் பிரியும் சங்கம்
செங்கடல் பிரியும் அலைகள்
ஒலியைப் பிரியும் காற்று
உளியைப் பிரியும் சிற்பம் (2)

யானோ நின்னைப் பிரிகிலேன்
பிரிகிலேன் பிரிகிலேன்

சிறுகோட்டு பெரும்பாயும் தூங்கியாங்கு
என் உயிரோ சிறிது
காதலோ பெரிது

https://www.youtube.com/watch?v=G2xRJB0dkMY



kaathirunthaai anbe lyrics-naveena saraswathi sabatham tamil song lyrics / காத்திருந்தாய் அன்பே

Movie Name:Naveena saraswathi saadham
Song Name:Kaathirunthaai anbe
Singers:Chinmayee,Nivaas,Abay jodhpurkar
Music Director:Prem kumar
Lyricist:Vairamuthu
Cast:Jai,Sathyan,VTV.Ganesh,Niveda thomas
Year of release:2013


Lyrics:-

Kaathirunthaai anbe
Endhan kaadhal nee thaane
Oar latcham vinmeen mazhaiyaai pozhigirathe

Kaathirunthaai anbe
Endhan kaadhal nee thaane
Oar latcham vinmeen mazhaiyaai pozhigirathe
Un vizhiyaal anbe
Ennai urugach seidhaaye
En seeni kanneer un mel vizhugirathe

Kadalodu serum vaan mazhaith thuli pol
Un kannodu maniyaaga kalanthiruppen
Udalodu ottich sellum nizhalgalaip pol
Naan unnodu pinnodu thodarnthiruppen

Unnaale nenjil adi bhoogambam

Pookkalaith thirakkuthu kaatru
Pulangalath thirakkuthu kaadhal
Mudinthathu marainthathu oodal
Kaadhal seivom
Oru murai malarvathu kaadhal
Iruvarumkalantha pin thaedal
Mudhaledhu mudivathu kaadhal
Kaadhal seivom

Kaathirunthaai anbe
Naan poothirunthen munbe
Kaathirunthaai anbe
Naan poothirunthen munbe

Kaathirunthaai anbe
Endhan kaadhal nee thaane
Oar latcham vinmeen mazhaiyaai pozhigirathe
Anbe anbe

Nee solliya melliya solliya
En thalai sorkkathai muttuthadi
Nee sammadham solliya nodiyil
Aan pugazh mothamum azhiyuthadi
En aavalai vaazha vaithaai
En aayulin naatkalai neela vaithaai
Neela vaithaai
En bhoomiyai eduthuk kondaai
Un punnagai dhesathai parisalithaai

Kaadhalane unnai thudikkavitten
Kangalai vaangik kondu
Urangavittenen uyire
Un anbu mei endru unarnthuvitten

Adi penne un vazhi ellaam naan irunthen
Ini nee pogindra vazhiyaaga naan iruppen

Sammadhithen unnil sangamithen

Unnaala nenjil adi bhoogambam

En senguyile siru veyile sitrazhage i love u
Hey porpadhame arpudhame sorppaname i love u

Kaathirunthaai anbe ....

காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே...
ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே

காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே...
ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே
உன் விழியால் அன்பே
என்னை உருகச் செய்தாயே
என் சீனி கண்ணீர் உன்மேல் விழுகிறதே

கடலோடு  சேரும் வான் மழைத்தூளி போல்
உன் கண்ணோடு மணியாக கலந்திருப்பேன்
உடலோடு ஒட்டிச் செல்லும் நிழல்களை போல்
நான் உன்னோடு பின்னோடு தொடர்ந்திருப்பேன்

உன்னாலே நெஞ்சில் அடி பூகம்பம்

பூக்களை திறக்குது காற்று
புலங்களை திறக்குது காதல்
முடிந்தது மறைந்தது ஊடல்
காதல் செய்வோம்
ஒருமுறை மலர்வது காதல்
இருவரும் கலந்தபின் தேடல்
முதல் எது முடிவது காதல்
காதல் செய்வோம்

காத்திருந்தாய் அன்பே
நான் பூத்திருந்தேன் முன்பே
காத்திருந்தாய் அன்பே
நான் பூத்திருந்தேன் முன்பே

காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே
ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே
அன்பே அன்பே

நீ சொல்லிய மெல்லிய சொல்லிய
என் தலை சொர்க்கதை முட்டுதடி
நீ சம்மதம் சொல்லிய நொடியில்
ஆண்புகழ் மொத்தமும் அழியுதடி
என் ஆவலை வாழ வைத்தாய்
என் ஆயுளின் நாட்களை நீள வைத்தாய்
நீள வைத்தாய்
என் பூமியை எடுத்துக் கொண்டாய்
உன் புன்னகை தேசத்தை பரிசளித்தாய்

காதலனே உன்னை துடிக்கவிட்டேன்
கண்களை வாங்கி கொண்டு
உறங்கவிட்டேன் என் உயிரே
உன் அன்பு மெய் என்று உணர்ந்துவிட்டேன்

அடி பெண்ணே உன் வழி எல்லாம் நான் இருந்தேன்
இனி நீ போகின்ற வழியாக நான் இருப்பேன்

சம்மதித்தேன் உன்னில் சங்கமித்தேன்

உன்னால நெஞ்சில் அடி பூகம்பம்

என் செங்குயிலே சிறு வெயிலே சிற்றழகே ஐ லவ் யூ
ஹே பொர்பதமே அற்புதமே சொர்பனமே ஐ லவ் யூ

காத்திருந்தாய் அன்பே ....

www.youtube.com/watch?v=-i7-GDulAxw


en uyir ennai vittu lyrics-ra one tamil song lyrics / என் உயிர் என்னை விட்டு


Movie Name:Ra one
Song Name:En uyir ennai vittu
Singer:Chinmayee
Music Director:Vishal-Sekar
Cast:Shahrukh khan ,Kareena kapoor
Year of release:2011


Lyrics:-

En uyir ennai vittu pirintha pinne
En dhegam mattum vaazhnthidumo oh

Kanneerile hai meen vaazhumo
Nee en udalukkul uyirallava
Ore uyir naamallavo
Udal vaazhave oh uyir pogumo
Irudhayam thoolaana piragu
Idigalaith thaangaathu pattup poochi siragu
Ini endhan vaazhve veeno
Verumaiyo

Mannin mel oru maamalai
Indru vizhunthathu enna
Malai thaan konda aruvigal rendum
Azhuvathum enna (2)

Un kannil thaane naan paarthuk konden
Kanne ponaal naan ennak kaanben
Un seviyil thaane naan oligal ketten
Seviye ponaal yaar paadal ketpen
Kannirandum kanneeril midhakka
Kaatrukku viral illai kanneeraith thudaikka
Vaazhvinai izhantha pin vaazhva oh nee vaa vaa

Mannin mel oru maamalai
Indru vizhunthathu enna
Malai thaan konda aruvigal rendum
Azhuvathum enna (2)

Nadhiyodu pogum kumizh pola vaazhkai
Enge udaiyum yaar sollak koodum
Ilaiyodu vazhiyum
Mazhai neeraip pole udalodu jeevan
Sollaamal pogum
Uyire nana enna aaven
Unarve illaatha kalaagip poven
Maranathai vella vazhi illaiya
Nee sol

Mannin mel oru maamalai
Indru vizhunthathu enna
Malai thaan konda aruvigal rendum
Azhuvathum enna (3)

என் உயிர்
என்னை விட்டு பிரிந்த பின்னே
என் தேகம் மட்டும் வாழ்ந்திடுமோ ஒ

கண்ணீரிலே ஹாய் மீன் வாழுமோ
நீ என் உடலுக்குள் உயிரல்லவா
ஒரே உயிர் நாமல்லவோ
உடல் வாழவே ஓ உயிர் போகுமோ
இருதயம் தூளான பிறகு
இடிகளைத் தாங்காது பட்டுப்பூச்சி சிறகு
இனி எந்தன் வாழ்வே வீணோ
வெறுமையோ

மண்ணின் மேல் ஒரு மாமலை
இன்று விழுந்தது என்ன
மலை தான் கொண்ட அருவிகள் ரெண்டும்
அழுவதும் என்ன (2)

உன் கண்ணில் தானே நான் பார்த்துக் கொண்டேன்
கண்ணே போனால் நான் என்னக் காண்பேன்
உன் செவியில் தானே நான் ஒலிகள் கேட்டேன்
செவியே போனால் யார் பாடல் கேட்பேன்
கண்ணிரண்டும் கண்ணீரில் மிதக்க
காற்றுக்கு விரல் இல்லை கண்ணீரைத் துடைக்க
வாழ்வினை இழந்த பின் வாழ்வா ஓ நீ வா வா

மண்ணின் மேல் ஒரு மாமலை
இன்று விழுந்தது என்ன
மலை தான் கொண்ட அருவிகள் ரெண்டும்
அழுவதும் என்ன (2)

நதியோடு போகும் குமிழ் போல வாழ்க்கை
எங்கே உடையும் யார் சொல்லக் கூடும்
இலையோடு வழியும்
மழை நீரைப் போலே உடலோடு ஜீவன்
சொல்லாமல் போகும்
உயிரே நான் என்ன ஆவேன்
உணர்வே இல்லாத கல்லாகிப் போவேன்
மரணத்தை வெல்ல வழி இல்லையா
நீ சொல்

மண்ணின் மேல் ஒரு மாமலை
இன்று விழுந்தது என்ன
மலை தான் கொண்ட அருவிகள் ரெண்டும்
அழுவதும் என்ன (3)

http://www.youtube.com/watch?v=g-op4CAkh9w



poyum poyum lyrics-settai tamil song lyrics / போயும் போயும் இந்த காதலுக்குள்ளே

Movie Name:Settai
Song Name:Poyum poyum
Singers:Haricharan,Chinmayee
Music Director:Thaman.S
Lyricist:Madhan Karky
Cast:Arya,Hansika,Anjali,Santhanam
Year of release:2013


Lyrics:-

Poyum poyum intha kaadhalukkulle
Neeyum neeyum enai thalli vittaaye
Maayam ondril ennai suzhala vaithaai
En idhayam sirikka vaithaai

Penne penne nee vandhadhaal nee vanthathaal
En naalai ondru indre indre vanthathe
Penne penne nee sendrathum nee sendrathum
En thendral kooda andre andre nindrathe

Poyum poyum intha kaadhalukkulle
Neeyum neeyum enai thalli vittaai
En idhayam sirikka vaithaai

Kaadhalil nee migai yaavume mooligai
Yengidum kaarigai naane
Naazhigai yaavilum punnagai serkka vaa ah ah
En kaayam ellaam nee aarach seithaai
Naan unnaale veroru pennaai maarinen

Penne penne nee sendrathum nee sendrathum
En thendral kooda andre andre nindrathe

Poyum poyum intha kaadhalukkulle
Neeyum neeyum enai thalli vittaaye
Maayam ondril ennaich suzhala vaithaai
En idhayam sirikka vaithaai

போயும் போயும் இந்த காதலுக்குள்ளே
நீயும் நீயும் எனை தள்ளி விட்டாயே
மாயம் ஒன்றில் என்னைச் சுழல வைத்தாய்
என் இதயம் சிரிக்க வைத்தாய்

பெண்ணே பெண்ணே
நீ வந்ததால் நீ வந்ததால்
என் நாளை ஒன்று இன்றே இன்றே வந்ததே
பெண்ணே பெண்ணே
நீ சென்றதும் நீ சென்றதும்
என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே

போயும் போயும் இந்த காதலுக்குள்ளே
நீயும் நீயும் எனை தள்ளி விட்டாய்
என் இதயம் சிரிக்க வைத்தாய்

காதலில் நீ மிகை யாவுமே மூலிகை
ஏங்கிடும் காரிகை நானே
நாளிகை யாவிலும் புன்னகை சேர்க்கவா ?
என் காயமெல்லாம் நீ ஆறச் செய்தாய்
நான் உன்னாலே வேறொரு பெண்ணாய் மாறினேன்

பெண்ணே  பெண்ணே
நீ சென்றதும் நீ சென்றதும்
என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே

போயும் போயும் இந்த காதலுக்குள்ளே
நீயும் நீயும் எனை தள்ளி விட்டாயே
மாயம் ஒன்றில் என்னைச் சுழல வைத்தாய்
என் இதயம் சிரிக்க வைத்தாய்

http://www.youtube.com/watch?v=7Pg8C1TgvQk


 

iravinil oruvanai lyrics-irandam ulagam tamil song lyrics / இரவினில் ஒருவனை சந்தித்தேன்

Movie Name:Irandam Ulagam
Song Name:Iravinil oruvanai
Singer:Chinmayee
Music Director:Anirudh Ravichander
Lyricist:Selva ragavan
Cast:Arya,Anushka Shetty
Year of release:2013


Lyrics:-

Iravinil oruvanai sandhithen
Thanimaiyil devanai sandhithen
Avanidam ennuyir paarthen naan
Penmanam enna muzhu kuruda
Evanidam vizhuvathu theriyaatha
Meenukku neendhuthal vilaiyaatta

Avan thaan manithan
Dhinam kanavil kaangindravan
Vidiyal odiyal ivai  yaavum
Kondaanavan (2)

Ivan paarthathum malar poothidum
Ivan pesinaal udal verthidum
Adi penmaiye enna yekkamo
Antha menmaiyin perum thaakkamo
Dhinam kaalaiyil kan vizhikkiren
Avan nyaabagam mella imaikkiren
Avan paarvaiyil naan midhakkiren
Avan tholgalai naan anaikkiren

Iravinil oruvanai sandhithen
Thanimaiyil devanai sandhithen
Avanidam ennuyir paarthen naan



இரவினில் ஒருவனை சந்தித்தேன்
தனிமையில் தேவனை சந்தித்தேன்
அவனிடம் என்னுயிர் பார்த்தேன் நான்
பெண்மனம் என்ன முழு குருடா
எவனிடம் விழுவது தெரியாதா
மீனுக்கு நீந்துதல் விளையாட்டா

அவன் தான் மனிதன்
தினம் கனவில் காண்கின்றவன்
விடியல் ஒடியல் இவை யாவும்
கொண்டானவன் (2)

இவன் பார்த்ததும் மலர் பூத்திடும்
இவன் பேசினால் உடல் வேர்த்திடும்
அடி பெண்மையே என்ன ஏக்கமோ
அந்த மென்மையின் பெரும் தாக்கமோ
தினம் காலையில் கண் விழிக்கிறேன்
அவன் ஞாபகம் மெல்ல இமைக்கிறேன்
அவன் பார்வையில் நான் மிதக்கிறேன்
அவன் தோள்களை நான் அணைக்கிறேன்

இரவினில் ஒருவனை சந்தித்தேன்
தனிமையில் தேவனை சந்தித்தேன்
அவனிடம் என்னுயிர் பார்த்தேன் நான்

http://www.youtube.com/watch?v=aWGfguZLrsE



adiye aavarangatukulla lyrics-annakodiyum kodiveeranum tamil song lyrics / ஆவாரங்காட்டுகுள்ள

Movie Name:Annakodiyum kodiveeranum
Song Name:Adiye aavarangaattukulla
Singers:Sathya Prakash,Chinmayee
Music Director:G.V.Prakash Kumar
Lyricist:Vairamuthu
Year of release:2013

Lyrics:-

Adiye aavarangattu kulla aadottum pulla
On vellaattam paala thantha vevagaaram illa
Maadu kannu meikka vanthu
Manusana meikkira ponne
Manasukku meicha kaadu nee thaan pulla
Kaalu vazhi kuthiya mulla
Kaik kondu neekkiya pulla
Nenjukkulla theicha mulla edudi mella

Ada poda aavarangaattu kulla aadottum pulla
Naa vellaattam paala thantha vevagaaram tholla

Aaalaangezha naa oonaangodi nee
Ennam pola yeri padanthukka
Ye aattukkeda nee aadaa thoda naan
Aalavittu odi odhungikka
Ye mullaiye thingum aadu malliga chediya viduma
Vekkathaiyum maaraappaiyum vittup puttu vaa

Ada poda aavarangattu kulla aadottum pulla
Naa vellaattam paala thantha vevagaaram tholla aah ...

Ye pottachi seruppa poova nenacha
Soththu vaazhikkulla sumakkura
Seruppa potta sirukki magala
Nenjaakuzhikkulla sumakkuren
Ye cholach sola thingura kaala
Thondakkuzhi serumudhal pola
Pudhik kulla yedho onnu sikkik kichu ippo

Adi vaadi aavarangaattu kulla aadottum pulla
On vellaattam paala thantha vevagaram illa
Maadu kannu meikka vanthu
Manusana meikkira ponne
Manasukku meicha kaadu neethaan pulla
Kaalu vazhi kuthiya mulla
Kaik kondu neekkiya pulla
Nenjukkulla theicha mulla edudi mella

அடியே ஆவாரங்காட்டுகுள்ள ஆடோட்டும் புள்ள
ஒன் வெள்ளாட்டம் பால தந்தா வெவகாரம் இல்ல
மாடு கன்னு மேய்க்க வந்து
மனுசன மேய்க்கிற பொண்ணே
மனசுக்கு மெச்ச காடு நீதான் புள்ள
காலு வழி குத்திய முள்ள
கை கொண்டு நீக்கிய புள்ள
நெஞ்சுக்குள்ள தெச்ச முள்ள எடுடி மெல்ல

அட போடா ஆவாரங்காட்டுகுள்ள ஆடோட்டும் புள்ள
நா வெள்ளாட்டம் பால தந்தா வெவகாரம் தொல்ல

ஆலாங்கெழ நா ஊனாங்கொடி நீ
எண்ணம் போல ஏரி படந்துக்க
யே ஆட்டுக்கெட நீ ஆடா தொட நான்
ஆளவிட்டு ஓடி ஓதுங்கிக்க
ஏ முள்ளையே திங்கும் ஆடு மல்லிக செடிய விடுமா
வெக்கத்தையும் மாராப்பையும் விட்டு புட்டு வா

அட போடா ஆவாரங்காட்டுகுள்ள ஆடோட்டும் புள்ள
நா வெள்ளாட்டம் பால தந்தா வெவகாரம் தொல்ல ஆ...

ஏ பொட்டச்சி செருப்ப பூவா நெனச்ச
சோத்து வாழிக்குள்ள சுமக்குர
செருப்ப போட்ட சிருக்கி மகள
நெஞ்சாங்குழிக்குள்ள சுமக்குரேன்
ஏ சோளச்சொல திங்குர காள
தொண்டக்குழி செருமுதல் போல
புத்திக்குள்ள ஏதோ ஒண்ணு சிக்கிக் கிச்சு இப்போ

அடி வாடி ஆவாரங்காட்டுகுள்ள ஆடோட்டும் புள்ள
ஓ வெள்ளாட்டம் பால தந்தா வெவகாரம் இல்ல
மாடு கன்னு மேய்க்க வந்து
மனுசன மேய்க்கிற பொண்ணே
மனசுக்கு மேச்ச காடு நீதான் புள்ள
காலு வழி குத்திய முள்ள
கைக் கொண்டு நீக்கிய புள்ள
நெஞ்சுக்குள்ள தெச்ச முள்ள எடுடி மெல்ல

 http://www.youtube.com/watch?v=uH4Wx3z9R7s



gaaliyana saalaiyil lyrics-sonna puriyathu tamil song lyrics / காலியான சாலையில்

Movie Nae:Sonna puriyathu
Song Name:Gaaliyana saalaiyil
Singers:S.P.B.Charan,Chinmayee
Music Director:Yadhish
Lyricist:Na.Muthukumar & Madhan karky
Cast:Mirchi Shiva,Vasundara Kashyap
Year of release:2013
Lyrics:-

Kaaliyaana saalaiyil neeyum naanum pogirom
Kaadhal kaarkaalam
Naan seluthum paadhaiyil nee azhaithup povathaal
Engum kaarkaalam

Enai unadhu madiyil kidathi kadathu
Ulagai valam vara
Unai anaikkum nodiyil thudikka maranthu
Idhayam adhirvura
Tharai mele mugil pola

Gaaliyaana saaliyil ....

Neer sindhum thoovaanil
Germany malare nanaiya vaa vaa
Neeraadum poo ennai
Kaigalil eduthu idhaththai thara vaa
Unathu kannil vazhi enathu munnil oli
Irandu deepangal nee yenthi vanthaayadi
Enakku nee yenginaai vizhigal nee veenginaai
Unathu kai theenda ingindru vanthen ada

Kaaliyaana saalaiyil ....

Vaa vendru naan solla
Nee mella bayanthu varuvatheno
Vegathin mogathai
Nan mudhan mudhalil unargireno
Manthin vaasalgalai adaithu naan poottuven
Thirakka nee vantha pinnaale thee moottuven
Vanangum en dheviyai thirakkum min saaviyai
Enathu nenjodu ennaalum naan maattuven

Gaaliyaana saaliyil ....

காலியான சாலையில் நீயும் நானும் போகிறோம்
காதல் கார்காலம்
நான் செலுத்தும் பாதையில் நீ அழைத்து போவதால்
எங்கும் கார்காலம்

எனை உனது மடியில் கிடத்தி கடத்து
உலகை வலம்வர
உனை அணைக்கும் நொடியில் துடிக்க மறந்து
இதயம் அதிர்வுற
தரை மேலே முகில் போல    

காலியான சாலையில் ....
      
நீர் சிந்தும் தூவானில்
ஜெர்மனி மலரே நனைய வா வா      
நீராடும் பூ என்னை
கைகளில் எடுத்து இதத்தை தரவா
உனது கண்ணில் வழி எனது முன்னில் ஒளி
இரண்டு தீபங்கள் நீ ஏந்தி வந்தாயடி
எனக்கு நீ ஏங்கினாய் விழிகள் நீ வீங்கினாய்
உனது கை தீண்ட இங்கின்று வந்தேனடா    

காலியான சாலையில் ....
      
வாவென்று நான் சொல்ல
நீ மெல்ல பயந்து வருவதேனோ
வேகத்தின் மோகத்தை
நான் முதன் முதலில் உணர்கிறேனோ
மனதின் வாசல்களை அடைத்து நான் பூட்டுவேன்
திறக்க நீ வந்த பின்னாலே தீ மூட்டுவேன்      
வணங்கும் என் தேவியை திறக்கும் மின் சாவியை
எனது நெஞ்சோட எந்நாளும் நான் மாட்டுவேன்

காலியான சாலையில் ....

http://www.youtube.com/watch?v=DHgooWz67Z8



sara sara saara kaathu lyrics-vaagai sooda vaa tamil song lyrics / சர சர சார காத்து

Movie Name:Vaagai sooda vaa
Song Name:Sara sara saara kaathu
Singer:Chinmayee
Music Director:M.Ghibran
Lyricist:Vairamuthu
Cast:Vimal,Iniya
Year of release:2011

Lyrics:-

Sara sara saara kaathu veesum podhum
Sir-ra paathu pesum podhum
Saara paambu pola nenju satham poduthe (2)

Iththu iththu iththu pona nenja thaikka
Otha paarva paathu sellu
Motha soththa ezhuthith thaaren
Moochu utpada (2)

Tea pola nee enna yen aathura

Sara sara saara kaathu ....

Enga ooru pidikkutha enga thanni inikkutha ?
Suthi varum kaathula sutta eeral manakkutha ?
Mutta kozhi pidikkava murappadi samaikkava ?
Elumbathu kadikkaiyil ennak konjam nenaikkava ?
Kammanjoru rusikka vaa
Samaicha kaiya konjam rasikka vaa
Modakkathaan rasam vachu madakka thaan paakuren
Retta dosai suttu vachu kaava kaakkuren
Mukkannu nungu naan vikkiren
Mandu nee gangaiye kekkura

Sara sara saara kaathu ....

Pullu kaattu vaasma pudhikkulla veesura
Maattu mani sathama manasukkul ketkura
Katta vandi ottura kaiyalavu manasula
Kaiyezhuthu podura kanni ponnu maarbula
Moonu naala paakkala ooril endha poovum pookkala
Aattuk kallu kuzhiyila orangip pogum poonaiya
Vanthu vanthup paathu thaan kerangip porenya
Meenukku yengura kokku nee
Koththave theriyala makku nee

Sara sara saara kaathu .... (2)

Iththu iththu .... (2)

Tea pola nee aathura

Kaattu malliga poothirukku kaadhala kaadhala
Vanthu vanthu odip pogum vandukkenna kaaichala

சர சர சார காத்து வீசும் போதும்
சார பாத்து பேசும் போதும்
சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே(2)

இத்து இத்து இத்து போன நெஞ்ச தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதித் தாரேன்
மூச்சு உட்ப (2)

டீ.. போல நீ என்ன ஏன்.. ஆத்துர

சர சர சார காத்து ....

எங்க ஊரு பிடிக்குதா எங்க தண்ணி இனிக்குதா ?
சுத்தி வரும் காத்துல சுட்ட ஈரல் மணக்குதா ?
முட்ட கோழி பிடிக்கவா முறைப்படி சமைக்கவா?
எலும்பது கடிக்கையில்
என்னக் கொஞ்சம் நெனைக்கவா ?
கம்மஞ்சோறு ருசிக்க வா
சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்கவா
மொடக்கதான் ரசம் வச்சு மடக்கதான் பாக்குறேன்
ரெட்டை தோசை சுட்டு வெச்சு காவ காக்குறேன்
முக்கன்னு நுங்கு நான் விக்கிறேன்
மண்டு நீ கங்கையே கேக்குற

சர சர சார காத்து ....

புல்லு காட்டு வாசமா புத்திக்குள்ள வீசுர
மாட்டு மணி சத்தமா மனசுக்குள் கேட்குரே
கட்ட வண்டி ஒட்டுர கையளவு மனசுல
கையெழுத்து போடுற கன்னி பொண்ணு மார்புல
மூணு நாளா பாக்கல..ஊரில் எந்த பூவும் பூக்கல
ஆட்டுக் கல்லு குழியில ஒரங்கிப் போகும் பூனையா
வந்து வந்துப் பாத்துத்தான் கிரங்கிப் போறேன்யா
மீனுக்கு ஏங்குற கொக்கு நீ
கொத்தவே தெரியல மக்கு நீ

சர சர சார காத்து ... (2)

இத்து இத்து (2)

டீ.. போல நீ ஆத்துர

காட்டு மல்லிக பூத்திருக்கு காதலா காதலா
வந்து வந்து ஓடிபோகும் வண்டுக்கென்ன காய்ச்சலா

http://www.youtube.com/watch?v=xxjvz-WGhaE



koorana paarvaigal lyrics-thoonga nagaram tamil song lyrics / கூரான பார்வைகள்

Movie Name:Thoonga nagaram
Song Name:Koorana paarvaigal
Singers:Hariharan,Chinmayee
Music Director:Sundar.C.Babu
Lyricist:Thamarai
Cast:Anjali,Vimal
Year of release:2011

Lyrics:-

Koorana paarvaigal kurumbaana vaarthaigal
En thookkam ponathe anbe
Pani peiyum iravile pala naatkal kanavile
Un tholil thoonginen en anbe
En veedu varugiraai en kaiyil sergiraai
Annaalai enniye vazhnthen
Unai andri yaaridam en kangal poi varum
Unai enni enniye theinthen

Koorana paarvaigal kurumbaana vaarthaigal
En thookkam ponathe anbe

Un viralathu asaiyuma
Oru dharisanam kidaikkuma
Ena ena un vaasalil
Dhinam dhinam naan nirkkiren
Sada sada ena vaasalil
Vizhum vizhum mazhaith thooralaai
Manam manam idhu maaruthe
Tholaivinil unaip paarthathum

Nadhiyaaga nee nuraiyaaga naan
Un vellam ulla mattum
Manam thathumbidap ponguthe
Karaiyaaga nee alaiyaaga naan
Vara vendaam endra podhum
Marubadi vanthu theenduven

Kooraana paarvaigal
Kurumbaana vaarthaigal
En thookkam ponathe anbe

Unakkena udai uduthanum
Unakkena dhinam samaikkanum
Un madiyinil saayanum
Maranam varai vaazhanum
Un vizhigalil neerenil
En manam adhaith thaanguma
Aruginil naan irukkaiyil
Kulam ena neer thaenguma

Aatrin neeril kallai veesi
Valaiyalgal seithu thanthaai
Varam ena adhai vaanginen
Pesum podhe kannai veesi
En pechai kondru vittaai
Eppadi ini pesuven

Kooraana paarvaigal
Kurumbaana vaarthaigal
En thookkam ponathe anbe
Unai andri yaaridam
En kangal poi varum
Unai enni enniye theinthen

Kooraana paarvaigal
Kurumbaana vaarthaigal
En thookkam ponathe anbe

கூரான பார்வைகள் குறும்பான வார்த்தைகள்
என் தூக்கம் போனதே அன்பே
பனி பெய்யும் இரவிலே பல நாட்கள் கனவிலே
உன் தோளில் தூங்கினேன் என் அன்பே
என் வீடு வருகிறாய் என் கையில் சேர்கிறாய்
அந்நாளை எண்ணியே வாழ்ந்தேன்
உன்னை அன்றி யாரிடம் என் கண்கள் போய் வரும்
உன்னை எண்ணி எண்ணியே தேய்ந்தேன்

கூரான பார்வைகள் குறும்பான வார்த்தைகள்
என் தூக்கம் போனதே அன்பே

உன் விரளது அசையுமா
ஒரு தரிசனம் கிடைக்குமா
என என உன் வாசலில்
தினம் தினம் நான் நிற்கிறேன்
சட சட என வாசலில்
விழும் விழும் மழைத் தூறலாய்
மனம் மனம் இது மாறுதே
தொலைவினில் உனைப் பார்த்ததும்

நதியாக நீ நுரையாக நான்
உன் வெள்ளம் உள்ள மட்டும்
மனம் ததும்பிடப் பொங்குதே
கரையாக நீ அலையாக நான்
வர வேண்டாம் என்ற போதும்
மறுபடி வந்து தீண்டுவேன்

கூரான பார்வைகள் குறும்பான வார்த்தைகள்
என் தூக்கம் போனதே அன்பே

உனக்கென உடை உடுத்தணும்
உனக்கென தினம் சமைக்கணும்
உன் மடியினில் சாயணும்
மரணம் வரை வாழனும்
உன் விழிகளில் நீரெனில்
என் மனம் அதைத் தாங்குமா
அருகினில் நான் இருக்கையில்
குளம் என நீர் தேங்குமா

ஆற்றின் நீரில் கல்லை வீசி
வளையல்கள் செய்து தந்தாய்
வரம் என அதை வாங்கினேன்
பேசும் போதே கண்ணை வீசி
என் பேச்சை கொன்று விட்டாய்
எப்படி இனி பேசுவேன்

கூரான வார்த்தைகள் குறும்பான வார்த்தைகள்
என் தூக்கம் போனதே அன்பே
உன்னை அன்றி யாரிடம்
என் கண்கள் போய் வரும்
உன்னை எண்ணி எண்ணியே தேய்ந்தேன்

கூரான பார்வைகள் குறும்பான வார்த்தைகள்
என் தூக்கம் போனதே அன்பே

http://www.youtube.com/watch?v=y5X8Dn1Bc5M






poi varava lyrics-thuppakki tamil song lyrics / மெல்ல விடைகொடு

Movie Name:Thuppaakki
Song Name:Poi varava
Singers:Karthik,Chinmayee
Music Director:Harris Jeyaraj
Lyricist:Pa.Vijay
Cast:Vijay,Kajal Agarwal
Year of release:2012

Lyrics:-

Mella vidai kodu vidai kodu maname
Intha ninaivugal ninaivugal ganame
Thaai manne selgindrom dhooram dhooram
Ingu uravugal pirivugal varuthe
Sila azhagiya valigalum tharuthe
Poggindrom pogindrom thooram thooram
Oh oh .. Ennai vittuch sellum uravugale
Oh oh .. Uyir thottuch sellum unarvugale
Poi varava

Nanban mugam nenjil nadanthu pogum
Kaadhal thendral koodu kadanthu pogum
Ippayanathin pon ninaivugal nenjadaikkume
Kaadu malai sella thuvangum podhum
Nenjil sonthangalin ninaivu moodum
Kaik kuzhanthaiyai anaikkave mei thudikkuthe

Aayinum aayiram enna alaigal alaigal
Alaigal nenjodu
Aayiram gnyaabagam uyir thudippaai thudikkum
Engal mannodu poi varava

Enge magan endru evarum ketka
Raanuvathil ena thaayum solla
Aththarunam pol porpadhakkangal
Kangal kai kidaikkuma

Naattukendru thannai kodutha veeram
Aadai mattum vanthu veedu serum
Apperumai pol ivvulagathil veru irukkuma
Dhesame dhesame en
Uyirin uyirin uyirin thavam aagum
Porile kaayame en
Udalin udalin  udalin varam aagum
Poi varava

Mella vidai kodu ....

மெல்ல விடைகொடு விடைகொடு மனமே
இந்த நினைவுகள் நினைவுகள் கனமே
தாய் மண்ணே செல்கின்றோம் தூரம் தூரம்
இங்கு உறவுகள் பிரிவுகள் வருதே
சில அழகிய வலிகளும் தருதே
போகின்றோம் போகின்றோம் தூரம் தூரம்
ஓ... ஓ... என்னை விட்டுச் செல்லும் உறவுகளே
ஓ... ஓ... உயிர் தெட்டுச் செல்லும் உணர்வுகளே
போய் வரவா

நண்பன் முகம் நெஞ்சில் நடந்து போகும்
காதல் தென்றல் கூடு கடந்து போகும்
இப்பயணத்தில் பொன் நினைவுகள் நெஞ்சடைக்குமே

காடு மலை செல்ல துவங்கும் போதும்
நெஞ்சில் சொந்தங்களின் நினைவு மூடும்
கைக் குழந்தையை அணைக்கவே மெய் துடிக்குதே

ஆயினும் ஆயிரம் எண்ண அலைகள் அலைகள்
அலைகள் நெஞ்சோடு
ஆயிரம் ஞாபகம் உயிர் துடிப்பாய் துடிக்கும் எங்கள்
மண்ணோடு போய் வரவா

எங்கே மகன் என்று எவரும் கேட்க
ராணுவத்தில் என தாயும் சொல்ல
அத்தருணம் போல் பொற்பதக்கங்கள் கண்கள்
கை கிடைக்குமா

நாட்டுக்கென்று தன்னை கொடுத்த வீரம்
ஆடை மட்டும் வந்து வீடு சேரும்
அப்பெருமை போல் இவ்வுலகத்தில் வேறு இருக்குமா
தேசமே தேசமே என்
உயிரின் உயிரின உயிரின் தவமாகும்
போரிலே காயமே என்
உடலின் உடலின் உடலின் வரமாகும் போய் வரவா

மெல்ல விடைகொடு ....

http://www.youtube.com/watch?v=1U2Ct0_NMWA



enna solla yethu solla lyrics-manam kothi paravai tamil song lyrics / என்ன சொல்ல ஏது சொல்ல

Movie Name:Manam kothi paravai
Song Name:Enna solla yethu solla
Singers:Vijay Prakash,Chinmayee
Music Director:D.Imman
Lyricist:Yuga bharathi
Cast:Sivakarthikeyan,Aathmya
Year of release:2012

Lyrics:-

Enna solla yedhu solla ninnu pochu bhoomi inga
Enna solla yethu solla thaththi thaavath thonuthinga
Otha sollil yaavume azhagaagave urumaruthe
Pothukittu vaaname pudhithaagave mazha thooruthe

Sokki sokki sokki sokki sokki
Sokki sokki sokki saagile ( 2 )

Ippadiye ikkaname seththidavum sammathame
Vanthaaye ennodu edhanale sol
Mun jenmame seidha mudive badhil
Sollum munbu tharisa kedanthene
Sonna pinbu velanjene
Kamban chukku karumba inichchene
Kappi kallu malarnthene
Enga ponaalum pogaama suthi suthi
Unna naai pola suthuthu en budhi

Enna solla ....

Sokki sokki sokki sokki sokki
Sokki sokki sokki saagile ( 2 )

Ichu ichu kannathula kichu kichu nenjukkulla
Yedhedho yekkangal enaik killuthe
Sonnaalum kekkaama adam pannuthe
Unna pathi enakkuth theriyaatha
Sokka vechu ena yaeppa
Thaneekkulla medhakkum padagaanen
Eppa pulla kara seppa
Unna kannaalam seiyum pothu kattik kittu
Pulla peppene pogaatha vittu

Enna solla ....

Sokki sokki sokki sokki sokki
Sokki sokki sokki saagile ( 2 )

என்ன சொல்ல ஏது சொல்ல நின்னு போச்சு பூமி இங்க
என்ன சொல்ல எது சொல்ல தத்தி தாவத் தோணுதிங்க
ஒத்த சொல்லில் யாவுமே அழகாகவே உருமாருதே
பொத்து கிட்டு வானமே புதிதாகவே மழை தூறுதே

சொக்கி சொக்கி சொக்கி சொக்கி சொக்கி
சொக்கி சொக்கி சொக்கி ஸாகிலே ( 2 )

இப்படியே இக்கணமே செத்திடவும் சம்மதமே
வந்தாயே என்னோடு எதனாலே சொல்
முன் ஜென்மமே செய்த முடிவே பதில்
சொல்லும் முன்பு தரிசா கெடந்தேனே
சொன்ன பின்பு வெளஞ்சேனே
கம்பன் சுக்கு கரும்பா இனிச்செனே
கப்பி கல்லு மலர்ந்தேனே
எங்க போனாலும் போகாம சுத்தி சுத்தி
உன்ன நாய் போல சுத்துது என் புத்தி

என்ன சொல்ல ...

சொக்கி சொக்கி சொக்கி சொக்கி சொக்கி
சொக்கி சொக்கி சொக்கி ஸாகிலே ( 2 )

இச்சு இச்சு கன்னத்துல கிச்சு கிச்சு நெஞ்சுக்குள்ள
ஏதேதோ ஏக்கங்கள் எனைக் கிள்ளுதே
சொன்னாலும் கேக்காம அடம் பண்ணுதே
உன்ன பத்தி எனக்குத் தெரியாதா
சொக்க வெச்சு என ஏப்ப
தண்ணீகுள்ள மெதக்கும் படகானேன்
எப்ப புள்ள கரை சேப்ப
உன்ன கண்ணாளம் செய்யும் போது கட்டிக் கிட்டு
புள்ள பெப்பேனே போகாத விட்டு

என்ன சொல்ல ....

சொக்கி சொக்கி சொக்கி சொக்கி சொக்கி
சொக்கி சொக்கி சொக்கி ஸாகிலே ( 2 )

http://www.youtube.com/watch?v=Yc6svdG384U



 
Copyright Tamil Movie Paadal Varigal All Rights Reserved
ProSense theme created by Dosh Dosh and The Wrong Advices.
Blogerized by Alat Recording Studio Rekaman.